# sq/1RFgoSobbwQC.xml.gz
# ta/1RFgoSobbwQC.xml.gz


(src)="1"> Ka pasur shume diskutime kohet e fundit ose me sakte keto shtate vitet e fundit per inteligjencen dhe si lidhet ajo me evolucionin .
(src)="2"> Qellimi i kesaj video nuk eshte te merret me kete diskutim , apo mund te jete kthyer ne nje debat ne shumicen e qarqeve , por eshte te bej pajtimin me nocionin .
(src)="3"> Ideja qe fshihet mbrapa inteligjences eshte se ka disa gjera qe ne i shohim ne boten tone qe jane te mahnitshme dhe duket e pabesueshme se kjo eshte produkti i nje procesi rastesor .
(trg)="1"> சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான வடிவமைப்பு, பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும் பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன . ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை . ஆனால், பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது . ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால் அக்கருத்துக்களை சரிசெய்வதாகும் . இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால் நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு முறையில் உள்ளதைப் பார்க்கிறோம் . சீரற்ற செயல்முறைகளின் விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது . அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் . அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம் . ஆச்சர்யமாக வேலை செய்கிறது . பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது . சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது . உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன . இரண்டு கண்கள் உள்ளன . ஆகவே, உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது . வண்ணங்களைப் பார்க்கிறோம் . இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல் சரியாக்கிக் கொள்கிறோம் . ஆகவே, மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது . இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற செயல்முறையில் நடந்திருக்கும் ? என்ற வாதம் வருகிறது . இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை . இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன், பரிணாம வளர்ச்சி என்பது இயற்கைத் தேர்வுடன் வருவது . பரிணாம வளர்ச்சி என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்கும் . ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது . இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை , இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப் பார்க்கும்பொழுது தெரியும் . உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை, மாறுபாடுகள் உள்ளன . நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு கிட்டப்பார்வை உள்ளது, சிலருக்கு தூரப்பார்வை உள்ளது . நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது . காலமாக ஆக அது அழிந்துவிடும் . மனிதர்களுக்கு கண்புரை வருகிறது , அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது . இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை . மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன் . உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம் . மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும் அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது . கடலுக்கடியில் மீன்கள் உள்ளன . அவைகளுக்கு கண்கள் உள்ளன . அவைகள் ஒளி உணரிகள் . மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி கண்கள் உண்டு . அவைகளுக்கு அவை பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும் இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம் . வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப் பொருள் உள்ளது, அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது . அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில் உயர்வாக உள்ளன . பகல்பொழுதுகளிலும் மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது . சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை . ஆகவே, சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது . நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன் . நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் . உண்மையில் மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை . ஆனால், என் முழு கருத்தும் என்னவென்றால் நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக் காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக் கூறப்போவதில்லை . மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது . நான் எப்பொழுதும் நினைப்பது, மதம் மற்றும் அறிவியல் அல்லது அனைத்தும் . வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும் . நமக்கு இந்தப் புரிதல் வேண்டும் . நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது . அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும் .. இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன் . உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன் . மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன் . இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல . என்னவென்றால் பரிணாமம் , சீரற்ற செயல்முறை , கடவுள் இல்லை, இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல . இல்லை, இது என்னுடைய கருத்தும் இல்லை . இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன் . கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை . அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல . உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல . ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை . நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது . நம் கவனத்தை வைரஸ், புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும் . ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும் அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும் . ஏனெனில், ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது , கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள் . டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும் .

# sq/1WnyIYERvm6z.xml.gz
# ta/1WnyIYERvm6z.xml.gz


(src)="1"> Ju faleminderit shume .
(src)="2"> Eshte me te vertete e frikshme te jesh ketu ne mesin e njerezve me te mencur nga me te mencurit .
(src)="3"> Jam ketu per t' iu treguar disa tregime te pasionit .
(trg)="1"> மிக்க நன்றி . மதிநுட்பமானவர்களுள் உன்னத மதிநுட்பமானவர்கள் மத்தியிலே நிற்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது . அதீத ஆர்வம் பற்றிய சில கதைகளைச் சொல்ல இங்கு வந்துள்ளேன் . எனக்குப் பிடித்த யூதப் பழமொழி ஒன்றுள்ளது . €€ உண்மையிலும் மிக உண்மையானது என்ன ? விடை : கதை நானொரு கதை சொல்லுபவர் . நமது பொது மனித இனம் பற்றிய உண்மையிலும் மிக உண்மையான சில விடயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் . எல்லாக் கதைகளும் எனக்கு ஆர்வத்தைக் கூட்டின மற்றும் இன்னும் சிலவோ நான் எழுதும் வரை என்னைக் கவர்ந்து கொண்டிருந்தன . குறிப்பிட்ட கருப்பொருள்கள் தொடந்து வந்து கொண்டிருக்கும் . நீதி , நியாயம் , வன்முறை , மரணம் , அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் , சுதந்திரம் . நம்மைச் சுற்றிக் காணப்படும் மாயைகள் பற்றி நான் அறிவேன் , அதனால் , நான் தொடர்புச் சம்பவங்கள் , தீர்க்க தரிசனங்கள் , உணர்வுகள் , கனவுகள் , இயற்கையின் சக்தி , மாயமந்திரம் ஆகியன பற்றி எழுதுகிறேன் .

(src)="14"> Ne 20 vitet e fundit kam publikuar disa libra , por kam jetuar ne anonimitet deri me shkurt 2006 , kur kam bartur flamurin Olimpik ne lojerat dimerore Olimpike ne Itali .
(src)="15"> Kjo me beri te famshme .
(src)="16"> Tani njerezit me njohin te Macy 's , dhe niperit e mbesat e mia mendojne qe jam e vecante .
(trg)="2"> கடந்த 20 வருடங்களில் நான் ஒரு சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன் . ஆனாலும் , 2006 பெப்ரவரி இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியை ஏந்தும் வரை நான் அறியப்படாதவளாய் வாழ்ந்து வந்தேன் . அது என்னை பிரபல்யமானவராக ஆக்கிவிட்டது . இப்போது என்னை மக்கள் மேஸிஸில் ( Macy 's ) அடையாளம் கண்டு கொள்கிறார்கள் . மற்றும் எனது பேரப்பிள்ளைகள் நான் " கூலானவர் " ( Cool ) என நினைக்கிறார்கள் .

(src)="17"> ( Te qeshura )
(src)="18"> Me lejoni te iu tregoj per kater minutat e mi te fames .
(src)="19"> Nje nga organizatoret e ceremonise se lojrave Olimpike , te ceremonise hapese , me telefonoi dhe me tha qe isha perzgjedhur te isha nje nga barteset e flamujve .
(trg)="3"> ( சிரிப்பு ) எனது நான்கு நிமிட புகழைப் பற்றி உங்களிடம் சொல்ல அனுமதி தாருங்கள் . ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் அமைப்பாளர்களுள் ஒருவர் என்னை அழைத்து , கொடி ஏந்துபவர்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார் .

(src)="20"> Une u pergjigja duke thene qe ky ishte me siguri nje rast i ngaterrimit te identiteteve sepse une jam larg se qenit atlete .
(src)="21"> Ne fakt , as qe isha e sigurte qe do te mund te ecja perrreth stadiumit pa karroce ndihmese .
(trg)="4"> இது நிச்சயமாக அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் உண்டாகியுள்ளதென பதிலளித்தேன் . ஏனெனில் , நான் ஒருபோதும் விளையாட்டு வீராங்கனையாக இருந்ததில்லை . உண்மையாக , நடைச்சாதனத்தின் ( Walker ) உதவியில்லாமல் அரங்த்தைச் சுற்றி வர என்னால் முடியுமென நான் நம்பவில்லை .

(src)="22"> ( Te qeshura )
(src)="23"> Me thane qe kjo s' eshte nje gje per te qeshur .
(src)="24"> Kjo do te ishte hera e pare qe vetem femrat do te mbartnin flamurin Olimpik .
(trg)="5"> ( சிரிப்பு ) இது சிரிக்கக்கூடிய விடயமொன்றல்ல என எனக்குச் சொல்லப்பட்டது . இதுவே முதன் முறையாக ஒலிம்பிக் கொடியை பெண்கள் மட்டும் ஏந்திச் செல்வதாக அமையப் போகிறது . ஐந்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி , ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர்கள் உள்ளனர் . இயற்கையாகவே எனக்குத் தோன்றிய முதல் கேள்வி , நான் எதை உடுத்திக் கொள்ளப்போகிறேன் ? என்பதுதான் .

(src)="27"> ( Te qeshura )
(src)="28"> Nje uniforme , me tha ajo , dhe me pyeti per madhesite trupore .
(src)="29"> Permasat e mia trupore .
(trg)="6"> ( சிரிப்பு ) ஒரு சீருடை என அவள் சொன்னாள் . அத்தோடு எனது அளவீடுகளையும் கேட்டு நின்றாள் . எனது அளவீடுகள் . மிஸலின் மேன் போன்று ஊதிய உடை உடுத்திக் கொண்டிருப்பது போல் என்னை நான் கற்பனை செய்து கொண்டேன் .

(src)="32"> ( Te qeshura )
(src)="33"> Nga mesi i shkurtit , gjeta veten ne Torino , ku turmat entuziaste brohorisnin kurdo qe ndonjeri nga 80 ekipet Olimpike dilte ne parade .
(src)="34"> Ata atlete kishin flijuar cdo gje per te marre pjese ne ato lojera .
(trg)="7"> ( சிரிப்பு ) பெப்ரவரி மாதத்தின் நடுவினில் டியூரினில் நானிருந்த போது , ஆர்வமான பார்வையாளர்கள் 80 ஒலிம்பிக் குழுக்களிள் , எந்த குழு வீதியில் சென்றாலும் ஆரவரிப்பதைக் கண்டேன் . விளையாட்டில் போட்டியிடுவதற்காக அந்த விளையாட்டு வீரர்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்திருந்தனர் . அனைவரும் வெற்றியை பெற வேண்டியவர்கள் தாம் , ஆனாலும் , அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும் . பனித்துளிகள் , பனிக்கட்டியின் தடிப்பு , காற்றின் விசை என்பன விளையாட்டின் அல்லது ஓட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் . ஆனாலும் , பயிற்சி அல்லது அதிர்ஷ்டம் என்பவற்றுக்கு அப்பால் , முக்கியமானது , இதயம் தான் . பயமில்லாத மற்றும் நம்பிக்கையுள்ள இதயம் மட்டுமே தங்கப் பதக்கம் வெல்ல முடியும் . இது அனைத்தும் அதீத ஆர்வம் பற்றியதாகும் . டியூரினின் தெருக்கள் சிவப்புச் சுவரொட்டிகளால் மூடப்பட்டு ஒலிம்பிக்கின் சொல்வாக்கை அறிவித்துக் கொண்டிருந்தது . அதீத ஆர்வம் இங்கேயே வாழ்கிறது . அது எப்போதும் உண்மைதானே ? இதயத்தில் எதனை நாம் கொண்டுள்ளோமோ , அதுவே நமது விதியை தீர்மானிக்கும் . இதையே எனது புத்தகங்களின் பாத்திரங்களில் நான் வேண்டுகிறேன் . ஒரு அதீத ஆர்வமுடைய இதயம் . கேள்வி கேட்கின்ற , விதிகளை வளைத்துப் போடுகின்ற , இடர்களைச் சந்திக்கின்ற சாதனையாளர்கள் , போராளிகள் , முயற்சியாளர்கள் , வீரர்கள் ஆகியோரே எனக்குத் தேவை . இந்த அறையில் இருக்கும் அனைவரையும் போன்ற மக்கள் . பொது உணர்ச்சியுடைய நல்ல மனிதர்கள் , ஆர்வமுள்ள பாத்திரங்களை உருவாக்கமாட்டார்கள் .

(src)="48"> ( Te qeshura )
(src)="49"> Ata jane vecse ish- bashkeshorte te mire .
(trg)="8"> ( சிரிப்பு ) இவர்கள் சிறந்த முன்னாள் துணைவர்களை மட்டுமே உருவாக்குவர் .

(src)="50"> ( Te qeshura ) ( Duartrokitje )
(src)="51"> Ne dhomen e gjelbert te stadiumit , takova barteset tjera te flamujve : tri atlete , dhe aktoret Susan Sarandon dhe Sofia Loren .
(src)="52"> Gjithashtu , edhe dy gra me zemra pasionante .
(trg)="9"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) அரங்கத்தின் ஒப்பனை அறையில் , கொடி ஏந்தும் ஏனையவர்களை நான் சந்தித்தேன் : மூன்று விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் நடிகைகளான சுசான் சரன்டன் மற்றும் சோபியா லோரன் ஆகியோர் . அத்தோடு , அதீத ஆர்வமுடைய இதயங்கொண்ட இரண்டு பெண்கள் . நோபல் பரிசு வென்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய் , இவர் 30 மில்லியன் தாவரங்களை நட்டு , அதன் மூலம் சில ஆபிரிக்காவின் பிரதேசங்களில் மண் மற்றும் காலநிலையை மாற்றியிருக்கிறார் . அதுமட்டுமா பல கிராமங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுமுள்ளார் . அடுத்தது கம்போடியாவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான , சோமாலி மம் , இவர் சிறுவர் விபச்சாரத்திற்கெதிராக அதீத ஆர்வத்துடன் போராடுகிறார் . இவர் 14 வயதாவிருக்கும் போதே , இவரின் பாட்டனால் விபச்சார விடுதிக்கு விற்கப்பட்டார் . இளம் கன்னியுடன் உடலுறவு கொண்டால் எயிட்ஸ் நோயிலிருந்து குணமடைய முடியும் என நம்பும் ஆண்கள் , இளம் பெண்களை கற்பழித்த உண்மையை எங்களிடம் சொன்னார் . விபச்சார விடுதிகளில் ஒரு நாளைக்கு 5 முதல் 15 பேர் வரை சிறு பிள்ளைகளை வற்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளார்கள் . அத்தோடு , அவர்கள் மறுக்கும் பட்சத்தில் மின்சாரத்தினால் கொடுமையிழைக்கப்பட்டுள்ளார்கள் .

(src)="59"> Ne dhomen e gjelbert une mora uniformen time .
(src)="60"> Nuk ishte lloji i rrobave qe une vesh zakonisht , por po ashtu ishte larg nga kostumi i personazhit Michelin te cilen po e prisja .
(src)="61"> Ne fakt , nuk ishin edhe aq keq .
(trg)="10"> ஒப்பனை அறையில் நான் எனது சீருடையைப் பெற்றுக் கொண்டேன் . நான் வழக்கமாக அணியும் உடை போல அது இருக்கவில்லை . ஆனாலும் , நான் எதிர்பார்த்தது போல் அது மிஸலின் மேன் உடையை போலும் இருக்கவில்லை . உண்மையாகவே நன்றாகவே இருந்தது . நான் குளிர்சாதனப் பெட்டி போல் தோற்றமளித்தேன் .

(src)="63"> ( Te qeshura )
(src)="64"> Por po ashtu dukeshin shumica e barteseve te flamujve , pervec Sofia Loren- it , simbolit universal te bukurise dhe pasionit .
(src)="65"> Sofia eshte mbi 70 vjece dhe duket shume bukur .
(trg)="11"> ( சிரிப்பு ) அழகினதும் அதீத ஆர்வத்தினதும் அகிலத்தின் அடையாளமான சோபியா லோரனைத் தவிர , ஏனைய கொடி ஏந்துபவர்களும் அப்படித்தான் தோன்றினார்கள் . சோபியாவுக்கு வயது 70க்கும் அதிகம் தான் . உன்னதமாகத் தோன்றினார் . அவர் ஆழமான மச்சத்தோடு அழகானவர் , ஒல்லியானவர் மற்றும் உயரமானவர் . இப்போது , எப்படி சுருக்கமில்லாத தோலையும் அதில் ஆழமான மச்சத்தையும் கொண்டிருக்க உங்களால் முடியும் ? எனக்குத் தெரியாது . " எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது ? " என அவரிடம் தொலைக்காட்சி பேட்டியின் போது கேட்கப்பட்டது . அதற்கு , " இருப்பு நிலை . எனது முதுகு எப்போதும் நேரானதுதான் . அத்தோடு , நான் முதியோர்களின் சத்தங்களை உண்டுபண்ணுவதில்லை " என பதிலளித்தார் .

(src)="72"> ( Te qeshura )
(src)="73"> Keshtu , ja ku keni ca keshilla falas nga njera nga femrat me te bukura ne bote .
(src)="74"> Mos u kollit , mos gerrhit , mos flisni me veten , mos pordhni .
(trg)="12"> ( சிரிப்பு ) பூமியிலேயுள்ள மிகச் சிறந்த அழகான பெண்களில் ஒருவரிடமிருந்து உங்களுக்குச் சில இலவசமான ஆலோசனைகள் கிடைக்கின்றன . உளருவதில்லை , தும்முவதில்லை , கஷ்டத்துடன் மூச்சு வாங்குவதில்லை . தன்னோடு தானே கதைப்பதில்லை . " குசு " விடுவதில்லை .

(src)="75"> ( Te qeshura )
(src)="76"> Ne fakt , ajo s 'e tha kete fiks .
(trg)="13"> ( சிரிப்பு ) நல்லது , அவர் அப்படிச் சரியாகச் சொல்லவில்லை .

(src)="77"> ( Te qeshura )
(src)="78"> Ne nje pike afersisht rreth mesnates , na ftuan tek krahet e stadiumit , dhe me ane te makinave te zerimit paralajmeruan flamurin Olimpik , dhe muzika filloi -- meqe ra fjala , ishte e njejta muzike si ketu , pjesa muzikore Aida .
(src)="79"> Sofia Loren- i ishte perpara meje - ajo eshte rreth 30 cm me e gjate se une , duke mos llogaritur floket e saj .
(trg)="14"> ( சிரிப்பு ) நள்ளிரவின் ஒரு நேரத்தில் அரங்கின் ஓரிடத்திற்கு நாம் கூட்டப்பட்டோம் , அங்கு ஒலிபெருக்கிகள் ஒலிம்பிக் கொடி என அறிவித்தன . இசை ஆரம்பித்தது . அதே அய்டா அணிவகுப்பு இசை இங்கும் ஒலிக்கக் கேட்டேன் . எனக்கு முன்னால் சோபியா லோரன் இருந்தார் . அவர் என்னை விட ஓரடி உயரமானவர் . கூம்பிய அவர் கூந்தலை கணக்கெடுக்காமலேயே .

(src)="80"> ( Te qeshura )
(src)="81"> Ajo ecte ne menyre elegante , si nje gjirafe ne savanat afrikane , duke bartur flamurin ne krahun e saj .
(src)="82"> Une vrapoja lehtas pas saj -- ( Te qeshura )
(trg)="15"> ( சிரிப்பு ) தனது தோளில் கொடியை ஏந்திய வண்ணம் , அவர் ஆபிரிக்க வனாந்தர ஒட்டகச் சிவிங்கி போன்று அழகாக நடந்து சென்றார் . அவரை நானும் தொடர்ந்தேன் .

(src)="83"> -- ne maje te gishtave , duke bartur flamurin ne doren e zgjatur , ne menyre qe koka ime te ishte perfundi te mallkuarit flamur .
(trg)="16"> ( சிரிப்பு ) காலை திடமாக்கி , எனது கரத்தில் கொடியை ஏந்திக் கொண்டேன் , அதனாலே உண்மையாகவே எனது தலை அக்கொடியினால் மறைந்து போனது .

(src)="84"> ( Te qeshura )
(src)="85"> Te gjithe aparatet digjitale ishin , natyrisht , te fokusuar te Sofia Loren- i .
(src)="86"> Kjo gje ishte me fat per mua , ngaqe ne shumicen e fotografive te shtypit dukem edhe une , ndonese shpesh ne mes te kembeve te Sofia- s .
(trg)="17"> ( சிரிப்பு ) எல்லா புகைபடக்கருவிகளும் சோபியாவின் பக்கமே இருந்தன . ™ அது எனக்கு அதிர்ஷ்டமானது தான் . ஏனெனில் அநேகமான செய்திப் புகைப்படங்களில் நானும் தோன்றினேன் . சில நேரங்களில் சோபியாவின் கால்களுக்கிடையில் .

(src)="87"> ( Te qeshura )
(src)="88"> Vendi ku shumica e burrave do te deshironin te ishin .
(trg)="18"> ( சிரிப்பு ) அது பல ஆண்களும் இருக்க ஆசைப்படும் இடமுமாகும் .

(src)="89"> ( Te qeshura ) ( Duartrokitje )
(src)="90"> Kater minutat me te mire te te gjithe jetes sime ishin ato ne stadiumin Olimpik .
(src)="91"> Bashkeshorti im shpesh ofendohet kur une them kete -- ndonese ia kam shpjeguar se ato qe ne bejme ne ambient te mbyllur zakonisht marrin me pak se kater minuta -- ( Te qeshura )
(trg)="19"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) எனது மொத்த வாழ்வின் உன்னதமான நான்கு நிமிடங்கள் அந்த ஒலிம்பிக் அரங்கில் இருந்ததுதான் . இதை நான் சொல்லும் போது , எனது கணவர் கோபித்துக் கொள்வார் . ஆனாலும் நாம் தனியாகச் செய்யும் அந்த விடயம் வழமையாக நான்கு நிமிடங்களுக்கு குறைவாகவே நீடிக்குமென அவருக்கு நான் விளங்கப்படுத்தியுமுள்ளேன் .

(src)="92"> -- keshtu qe ai s' duhet ta marri personalisht .
(src)="93"> Kam gjithe ato copa te prera te shtypit nga ato kater minutat magjike , sepse nuk deshiroj t 'i harroj kur mosha te me kete shkaterruar qelizat e trurit .
(src)="94"> Deshiroj qe gjithmone ta bart ne zemer fjalen kyce te Olimpiades -- pasionin .
(trg)="20"> ( சிரிப்பு ) அதனால் அதை அவர் தனிப்பட்ட விடயமாக எடுக்கக்கூடாது . அந்த உன்னதமான நான்கு நிமிடங்கள் பற்றிய அனைத்து செய்திகளையும் நான் வைத்திருக்கிறேன் . ஏனெனில் , முதிய வயது என் மூளைக் கலங்களை அழிக்கும் போதும் அந்த விடயத்தை நான் மறக்க விரும்பவில்லை . ஒலிம்பிக் திறவுச் சொல்லை என்றும் எனது இதயத்தோடு சுமந்து செல்ல விரும்புகிறேன் . அது தான் அதீத ஆர்வம் . ஆக , இதோ அதீத ஆர்வத்தின் கதை . ஆண்டு 1998 , இடம் காங்கோ டுட்ஸி அகதிகளுக்கான சிறை முகாம் . சிறு தகவல் , உலகில் அனைத்து அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களில் 80 சதவீதமானவர்கள் பெண்களும் சிறுமிகளுமாவர் . கொங்கோவிலுள்ள இந்த இடத்தை நாம் மரண முகாம் என அழைக்கலாம் . ஏனெனில் , கொல்லப்படாதவர்கள் கூட , நோயினாலும் பட்டினியாலும் இங்கு இறந்து போவர் . ரோஸி மபென்டோ என்ற இளம் பெண்ணும் அவளின் பிள்ளைகளும் தான் இந்தக் கதையின் முக்கிய பாத்திரங்கள் . அவளொரு கற்பிணியும் விதவையுமாவாள் . அவளது கணவன் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதை படையினர் அவளை வலுக்கட்டாயமாகப் பார்க்கச் செய்திருக்கிறார்கள் . எவ்வாறாயினும் , அவளது ஏழு பிள்ளைகளையும் காப்பாற்ற அவளால் முடிந்தது . ஒரு சில மாதங்களுப்பின் பின்னர் , அவள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தாள் . இரண்டு சின்னஞ் சிறிய ஆண் குழந்தைகள் . அவள் தொப்புள் கொடியைக் கம்பொன்றினால் வெட்டினாள் . அவள் முடி கொண்டே அதில் முடிச்சு போட்டாள் . முகாமின் பொறுப்பாளர்களின் விருப்பைப் பெறுவதற்காக அவர்களின் பெயரையே இரட்டைக் குழந்தைக்கு வைத்து , தேநீர் ஊட்டினாள் ஏனெனில் , அவளது பால் போதுமானதாக இருக்கவில்லை . படையினர் அவளது தங்குமிடத்திற்குள் உட்புகுந்து அவளது தலையில் துப்பாக்கியை வைத்து , தனது மூத்த மகளைக் கற்பழிக்க முற்பட்டபோதும் , அவளின் மகளை இறுக அணைத்து அது நடக்காமல் தடுத்தாள் .

(src)="107"> Disi , familja ka mbijetuar per 16 muaj , dhe me pas , me fat te jashtezakonshem , dhe me zemren pasionante te nje burri te ri Amerikan , Sasha Chanoff , i cili ka arritur ta vendose ate ne nje aeroplan shpetimi te SHBAve ,
(src)="108"> Rose Mapendo dhe te nente femijet e saj kane arritur ne Phoenix te shtetit Arizona , ku tani ata jetojne dhe arrijne suksese .
(trg)="21"> எப்படியோ இந்தக் குடும்பம் 16 மாதங்களிற்கு பிழைத்தது . பின்னர் , ரோஸ் மபென்டோவும் அவளின் ஒன்பது பிள்ளைகளும் அசாதாரணமான அதிஷ்டத்தாலும் , சாசா சானொப் என்ற இளைஞனின் அதீத ஆர்வங் கொண்ட இதயத்தாலும் இன்று அரிசோனாவிலுள்ள பீனிக்ஸிள் அமெரிக்க மீட்புத் திட்டத்தின் கீழ் நலமாய் வாழ்வோட்டுகிறார்கள் .

(src)="109"> Mapendo , ne gjuhen Suahili , nenkupton dashuri te madhe .
(trg)="22"> மபென்டோ என்பது ஸ்வாஹிலி மொழியில் உன்னத அன்பு என்று பொருள் .

(src)="110"> Protagonistet e librave te mi jane gra te forta dhe pasionante sikurse Rose Mapendo .
(src)="111"> Une nuk i shpik .
(src)="112"> Nuk kam nevoje te bej kete .
(trg)="23"> எனது புத்தகங்களின் பிரதான பாத்திரங்கள் ரோஸ் மபென்டோ போன்ற பலமான மற்றும் அதீத ஆர்வமுள்ள பெண்களாவர் . நான் அவற்றை உருவாக்குவதில்லை . அதற்கான தேவையுமில்லை . சுற்றுப்புறச் சூழலில் அவர்களை நான் காண்கிறேன் . எனது வாழ்வில் பெண்களுடனும் பெண்களுக்காகவும் வேலை செய்திருக்கிறேன் . அவர்களை எனக்கு நன்கு தெரியும் . ஆணாதிக்கமுள்ள கதோலிக்க பழைமையைப் பாதுகாக்கும் குடும்பத்தில் உலக முடிவின் தொன்மைக் காலத்தில் நான் பிறந்தேன் . அதுவரைக்கும் சிலியில் " தீவிர பெண்ணியல்வாதி " என்ற சொல்லே எட்டவில்லை , ஆனால் , நான் ஐந்து வயதிலேயே தீவிர பெண்ணியல்வாதியாகவே இருந்தேன் . அதனால் , எனக்கு என்ன பிரச்சனை என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை .

(src)="118"> ( Te qeshura )
(src)="119"> Shpejte e kam zbuluar se me duhej te paguaja nje cmim te larte per lirine time , si dhe per venien te pyetje te patriarkalizmit .
(src)="120"> Por une isha e gezuar te mund ta paguaja kete cmim , ngaqe per secilen goditje qe mirrja , mund t 'i jipja dy .
(trg)="24"> ( சிரிப்பு ) எனது சுதந்திரத்திற்கும் ஆணாதிக்கம் தொடர்பாக விமர்சிப்பதற்கும் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளதென்பதை நான் பின்னர் கண்டறிந்து கொண்டேன் . ஆனாலும் நான் அந்த விலையைக் கொடுப்பதில் மகிழ்ந்தேன் . ஏனெனில் , நான் பெறும் ஒரு விமர்சனத்திற்காக என்னால் இரண்டு விமர்சனங்களை வெளியிட முடிந்தது .

(src)="121"> ( Te qeshura )
(src)="122"> Njehere , kur vajza ime Paula ishte ne te njezetat , ajo me tha mua qe feminizmit i kishte kaluar koha , qe mua me duhej ta tejkaloja kete .
(src)="123"> Patem nje zenke per t 'u mbajtur ne mend .
(trg)="25"> ( சிரிப்பு ) பெண்ணியல் வாதம் காலாவதியாகிவிட்டது , அதிலிருந்து நான் விடுபட வேண்டும் என தனது வயது இருபதுகளில் இருக்கும் போது எனது மகள் போலா என்னிடம் சொன்னாள் . மறக்க முடியாத சண்டையொன்று நாம் பிடித்தோம் . பெண்ணியல் வாதம் காலாவதியாகிவிட்டதா ? ஆம் , எனது மகள் மற்றும் இங்கிருக்கும் அனைவர் போன்ற வரப்பிரசாதமுடைய பெண்களுக்கு அப்படியிருக்கலாம் , ஆனால் , இன்னும் வற்புறுத்தி இளமையில் திருமணம் , விபச்சாரம் , திணிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவூட்ட முடியாத அல்லது கூடாத உலகளவில் உள்ள பெருன்பான்மையான எமது சகோதரிகளுக்கு அது அப்படியாக இருக்க முடியாது . அவர்களது உடலிலோ அல்லது வாழ்விலோ எந்தவித கட்டுப்பாடும் அவர்களிடம் இல்லை . கல்வி மற்றும் சுதந்திரம் என்பன அவர்களிடம் இல்லை . அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் , வதைக்கப்படுகிறார்கள் , சிலவேளை கொலை செய்யவும் படுகிறார்கள் . பெண்ணியல் வாதி என அழைக்கப்படுவது இன்றைய பல மேற்கத்திய இளம் பெண்களுக்கு இழிவாகத் தோன்றுகிறது . பெண்ணியல் கவர்ச்சிகரமாய் என்றுமே இருந்ததில்லை . ஆனாலும் அது என்னை லீலைகள் செய்வதிலிருந்து ஒருபோதும் தடுக்கவும் இல்லை . ஆணில்லாத குறை எனக்கு அரிதாகவே தோன்றியது .

(src)="131"> ( Te qeshura )
(src)="132"> Feminizmi nuk ka vdekur , fare .
(src)="133"> Vetem ka evoluar .
(trg)="26"> ( சிரிப்பு ) எந்தக் காரணங்களாலும் பெண்ணியல் இறந்து போகவில்லை . அது பரிணாம வளர்ச்சி கொண்டிருக்கிறது . உங்களுக்கு அந்தச் சொல் பிடிக்காவிட்டால் , தேவைதைக்காக வேண்டியேனும் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் . அப்ரோடைட் அல்லது வீனஸ் அல்லது பிம்போ அல்லது உங்களுக்கு வேண்டியமாதிரி அழையுங்கள் . பெயரால் எதுவும் ஆகப்போவதில்லை , அது என்னவென்பதை புரிந்து கொண்டு அதற்கு ஆதரவு வழங்கினாலே போதும் . இதோ இன்னொரு அதீத ஆர்வத்தின் கதை , ஆனால் இது சோகக் கதை .