# az/39BA7CdBlQ3u.xml.gz
# ta/39BA7CdBlQ3u.xml.gz


(src)="1"> Keçən həftə vəqfin ( Bill & amp ; Melinda Gates Vəqfi ) etdiyi işlər haqqında bir məktub yazdım və bəzi problemləri dilə gətirdim .
(src)="2"> Warren Buffet ( məşhur iş adamı ) , işlərin yolunda gedib getmədiyi mövzusunda bəzi qiymətləndirmələr etməmi , və bunu ənənəvi hala gətirməyimi tövsiyə etdi .
(src)="3"> Buradakı amaçlarımdan biri daha çox insanı bu problemlər üzərində işə çəkməkdə , çünki çox əhəmiyyətli bəzi problemlər üzərində itələyici bir qüvvət olmadan çalışılmadığını düşünürəm .
(trg)="1"> கடந்த வாரம் , நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் சில பிரச்சனைகள் குறித்து ஒரு கடிதம் எழுதினேன் . வார்ரேன் பபடின் பரிந்துரையின் பெயரில் நான் அதை செய்தேன் - எது நன்றாக செயல்படுகிறது , எது சரியில்லை என்பதில் நேர்மையாக இருத்தல் மற்றும் அதை வருடம்தோறும் செயல்படுத்தல் வேண்டும் . அந்த பிரச்சனைகளை சமாளிக்க மேலும் பலரை உள் ஈர்க்கலாம் என்பதே என் குறிக்கோள் , ஏனென்றால் இயல்பாக தீர்க்க முடியாத சில முக்கியமான பிரச்சனைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன் அதாவது , விஞ்ஞானிகளை , தொடர்பாளர்களை , சிந்தனையாளர்களை மற்றும் அரசாங்கத்தை நல்ல காரியம் செய்ய சந்தை தூண்டுவதில்லை . இந்த காரியங்களில் கவனம் செலுத்தல் மற்றும் இதில் அக்கறையும் , மற்றவரை உள் ஈர்க்கும் தன்மையுடைய அறிவார்ந்தவர்களை சேர்த்தால் மட்டுமே நமக்கு தேவையான முன்னேற்றத்தை இதில் காண்பிக்க முடியும் . ஆதலால் , இக்காலை பொழுதில் , இந்த இரு பிரச்சனைகளை உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன் . மற்றும் அதில் அதன் நிலை பற்றியும் பேசப்போகிறேன் . ஆனால் இதனை ஆரம்பிக்கும் முன் , நான் கூற விரும்புவது என்னவென்றால் நான் ஒரு நன்னம்பிக்கையாளன் . பெரிய பிரச்சனை என்றாலும், அதற்கான விடையைக் காண முடியும் என்று நான் நினைக்கிறேன் . கடந்த காலத்தை கவனிக்கும் பொழுதுதான் அந்த உணர்வு எனக்கு தோன்றியது . கடந்த நூற்றாண்டில் , மனிதனின் சராசரி வாழும் காலம் இரட்டிப்பு ஆகியுள்ளது . எனக்கு விருப்பமான , இன்னொரு புள்ளி விபரம் , பால்ய மரணங்கள் பற்றியது .

(src)="12"> 1960da 110 milyon uşaq doğuldu , və bu uşaqlardan 20 milyonu 5 yaşına gəlmədən öldü .
(src)="13"> 5 il əvvəl , 135 milyon uşaq doğuldu - yəni daha çox - və 10 milyondan azı 5 yaşına gəlmədən öldü .
(src)="14"> Bu , uşaq ölüm nisbətində yarı yarıya azalma demək .
(trg)="2"> 1960 வரை , 110 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன . இதில் , ஐந்து வயதை எட்டும் முன் 20 மில்லியன் குழந்தைகள் மடிந்துள்ளன . ஐந்து வருடங்களுக்கு முன் , 135 மில்லியன் குழந்தைகள் பிறந்தன -- அதாவது , நிறைய -- இதில் , ஐந்து வயதை கடக்காமல் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கு கீழாகும் . ஆக , பால்ய இறப்புவிகிதம் இரண்டு மடங்கு குறைந்துள்ளது . இது ஒரு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் . ஒவ்வொரு உயிரும் முக்கியமானது . நம்மால் இது முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் வருவாய் ஏற்றம் மட்டும் அல்ல , சில சாதனைகளுக்கும் அதில் பங்கு உண்டு . பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் . உதாரணத்துக்கு , தட்டமையால் ஏற்பட்ட மரணங்கள் நான்கு மில்லியன் 1990- ஆம் ஆண்டு வரை ஆனால், அது தற்பொழுது நான்கு மில்லியனைவிடக் குறைவு . ஆக , நாம் நிச்சயமாக மாற்றங்கள் செய்ய முடியும் . அந்த 10 மில்லியனை மேலும் பாதியாக்குதலே அடுத்த சாதனையாகும் . அதை இருபது வருடங்களுக்குள் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன் . ஏன் ? பெருமளவில் உயிர்களை கொல்லும் நோய்களின் எண்ணிக்கை குறைவு : வயிற்றுபோக்கு , நுரையீரல் காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவை . ஆக , இக்காலைப் பொழுதில் நான் ஆராய போகும் முதல் பிரச்சனைக்கு வந்து விட்டோம் . அது என்னவென்றால் , நுளம்புகளால் பரவும் கொடூர நோய்களை தடுப்பது எப்படி ? சரி , இந்த நோயின் சரித்திரம் தான் என்ன ? பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கொடூர வியாதியாக வியாபித்திருக்கிறது . நாம் மரபணுக் குறியீட்டை உற்று நோக்கினால் , இந்த நோய்க்கு மட்டும் தான் , ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்தவர்கள் , மலேரியா மூலமாக இறப்பதை தவிர்க்கும் பல காப்பு நிலைகளைக் கொண்டுள்ளனர் .

(src)="29"> Ölümlərin sayı 1930- cu ildə 5 milyona çatıb zirvə etdi .
(src)="30"> Bu həqiqətən qorxunc bir ədəd idi .
(src)="31"> Və xəstəlik dünyanın hər yerində idi .
(trg)="3"> 1930- களில் ஐந்து மில்லியனுக்கு மேல் சென்று உச்சத்தை எட்டியது இந்நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை . அது முற்றிலும் அசுரத்தனமானது . மற்றும் , இந்நோய் உலகம் முழுவதும் பரவி இருந்தது . கொடூரமான நோய் . அமெரிக்காவில் இருந்தது . ஐரோப்பாவில் இருந்தது . இந்நோய் ஏற்படும் காரணம் தெரியாமல் 1900- களின் ஆரம்பம் வரை மக்கள் தவித்தனர் , நுளம்புகள் தான் இந்நோயை ஏற்படுத்துகின்றன என்பதை ஒரு ஆங்கிலேய ராணுவ வீரர் கண்டறியும் வரை . ஆதலால் , அது எங்கும் பரவியுள்ளது . சாவு எண்ணிக்கையை குறைத்தன இரண்டு கருவிகள் . பூச்சிகொல்லிகளால்( DDT ) நுளம்புகளை அழித்தல் ஒன்று . கொயினா மருந்து மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துதல் இன்னொன்று . அதனால் தான் , சாவு எண்ணிக்கை குறைந்தது . இதில் நடந்த வேடிக்கை என்னவென்றால் , மிதவெப்ப மண்டலங்களில் இந்நோய் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது , பணக்கார தேசங்கள் பல அம்மண்டலத்தில் உள்ளன . ஆக, 1900- களில் , அது எங்கும் இருந்தது .

(src)="43"> 1945- ci ildə hələ bir çox yerdə rast gəlinir .
(trg)="4"> 1945- இல் , பல இடங்களில் இருந்தது .

(src)="44"> 1970- ci ildə ABŞ və Avropanın çox xəstəlikdən xilas olur .
(trg)="5"> 1970- இல் , அமெரிக்க மற்றும் ஐரோப்பா அதை துரத்திவிட்டன .

(src)="45"> 1990- cı ildə şimaldakı bölgələrin çoxu xilas olur .
(src)="46"> Və yaxın tarixdə görürük ki , xəstəlik yalnız ekvator ətrafında .
(trg)="6"> 1990- இல் , வட பகுதிகளில் இந்நோய் அறவே இல்லை . தற்பொழுது , இந்நோய் நிலநடுக்கோடு அருகே மட்டுமே இருக்கிறது .

(src)="47"> Bu da bizi bu ziddiyyətə gətirir : xəstəlik yalnız kasıb ölkələrdə olduğu üçün , xəstəliyə kifayət qədər sərmayə edilmir .
(src)="48"> Məsələn , keçəllik dərmanları üçün ayrılan pul qızdırmaya ayrılan puldan çox .
(src)="49"> Tamam , keçəllik bərbad bir şey .
(trg)="7"> ஆக , இதில் முரண்பாடு என்னவென்றால் , இந்நோய் ஏழ்மையான தேசங்களில் இருப்பதால் , இதற்கு தகுந்த முதலீடு கிடைப்பதில்லை . உதாரணமாக , வழுக்கைத்தலைக்கான மருந்தில் நிறைய பணம் செலவழிக்க படுகிறது , மலேரியாக்கு செலவாகும் பணத்தை விட . இப்போது வழுக்கைத்தலை , அது கொடுரமானது .

(src)="50"> ( Qəhqəhə )
(src)="51"> Və zəngin kişilər sarsılmış vəziyyətdə .
(src)="52"> Elə buna görə kelliğe prioritet verilmiş .
(trg)="8"> ( சிரிப்பொலி ) பணக்காரர்கள் அல்லற்படுகின்றனர் இதனால் . ஆகவே , இதற்கு முன்னுரிமை தரப்படுகிறது . ஆனால், மலேரியா -- மலேரியாவால் வருடத்திற்கு ஏற்படும் பல மில்லியன் இறப்புகள் அதன் பாதிப்பை குறைத்து கூறுகிறது . ஒரே நேரத்தில் , 200 மில்லியன் மக்களுக்கு அதிகமாக இந்நோயால் அவதிபடுகிறார்கள் . இந்த இடங்களுக்கு பண முதலீட்டை கொண்டு செல்ல இயலவில்லை ஏனென்றால் அவ்விடங்கள் பின்தங்கியுள்ளன . நுளம்புகளால் தான் மலேரியா பரப்பபடுகிறது . அதை நீங்கள் அனுபவிக்கவே , இங்கு சில நுளம்புகளை கொண்டு வந்துள்ளேன் . இந்த அரங்கத்தை சுற்றிப்பார்க்க அதை விடுவிப்போமாக .

(src)="60"> ( Qəhqəhə )
(src)="61"> Bunu yalnız kasıb insanlar yaşayacaq deyə bir şey yox .
(trg)="9"> ( சிரிப்பொலி ) ஏழை மக்கள் மட்டுமே இதை அனுபவிக்க வேண்டும் என்றில்லை .

(src)="62"> ( Qəhqəhə ) ( Alqış )
(src)="63"> O ağcaqanadlar xəstəlikli deyildi .
(trg)="10"> ( சிரிப்பொலி ) ( கரகோஷம் ) அந்த நுளம்புகளிடம் நோய் பரப்பும் கிருமிகள் இல்லை .

(src)="64"> Nəticə olaraq bir neçə fikir tapdıq .
(src)="65"> Məsələn yataq tülləri ( cibinlik ) .
(src)="66"> Yataq tülləri möhtəşəm vasitələr .
(trg)="11"> ஆக , நாம் புதிய கருவிகளுடன் வந்துள்ளோம் . நுளம்பு வலைகள் . நுளம்பு வலைகள் ஒரு மிகப்பெரும் கருவி . தாயும் , சேயும் நுளம்பு வலைக்குள்ளே இரவு நேரம் தூங்கலாம் , அதனால் , இரவு நேரம் அவர்களை கடிக்கும் நுளம்புகள் , இப்பொழுது கடிக்க இயலாது . பூச்சிகொல்லி( DDT ) மருந்துகளை வீட்டிற்க்குள் உபயோகித்தல் மற்றும் இந்த நுளம்பு வலைகளின் மூலமாக சாவு எண்ணிக்கையை ஐம்பது சதவீதம் குறைக்க முடியும் . இது தான் இப்போது , பல தேசங்களில் நடந்தேறியுள்ளது . இது மிகப் பெரிய விஷயம் . ஆனால் , மலேரியாவிடம் நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் -- ஏனென்றால் இதில் நோய்கிருமியும் பரிணமிக்கிறது மற்றும் நுளம்புகளும் பரிணமிக்கிறது . ஆக, முன்பு நாம் உபயோகித்த கருவிகள் அனைத்தும் தற்பொழுது செயலிழந்து விட்டன . ஆதலால் , நமக்கு இரண்டு விருப்பதேர்வுகளே உள்ளன . ஒரு தேசத்துக்கு சரியான கருவிகளோடு சரியான வழியிலும் சென்று , அங்கே விறுவிறுப்பாக செயல்பட்டால் , அங்கு முற்றிலும் நோயை அழிக்கலாம் . அவ்வழியில் தான் மலேரியா வரைப்படம் சுருங்குவதை நாம் கண்டோம் . அல்லது , அரை- மனதுடன் ஒரு இடத்துக்கு சென்று , நோய் பளுவை குறிப்பிட்ட காலத்துக்கு குறைக்கலாம் , எனினும் , அக்கருவிகள் செயலற்று போகும் , மற்றும் சாவு எண்ணிக்கை மீண்டும் உயரும் . உலகம் இதை கடந்து வந்திருக்கிறது , அது அக்கறை கொண்ட இடங்களில் மற்றும் அக்கறை காண்பிக்காத இடங்களிலும் . தற்பொழுது , நாம் ஏறுமுகத்தில் இருக்கிறோம் . நுளம்பு வலைக்கான நிதியுதவி அதிகரித்துள்ளது . புதிய மருந்துக்கான கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது . மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள ஒரு தடுப்பூசியை எங்கள் அறக்கட்டளை ஊக்குவிக்கிறது . இது சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் . அது பயனுள்ளதாக இருந்தால் , மூன்றில் இரண்டு பங்கு உயிர்களை காப்பாற்றும் . ஆக , நம்மிடம் அப்புதிய கருவிகள் இருக்கப் போகிறது . ஆனால், அது மட்டுமே நாம் செல்லவேண்டிய பாதைக்கான வரைபடம் ஆகாது . ஏனென்றால் , இந்நோயை அழிக்க உதவும் வரைப்படம் பல விஷயங்களை சார்ந்தது . நிதியுதவி அதிகமாக்க , கண்ணால் காண கூடிய வளர்ச்சியை பெரிதாக்க , மற்றும் வெற்றிக்கதைகளை எடுத்துகூற தொடர்பாளர்கள் வேண்டும் . இதில் சமூக அறிவியலாளர்களுக்கும் பங்கு உள்ளது , 70 சதவீதம் மக்கள் மட்டுமே உபயோகிக்கும் நுளம்பு வலைகள் , எப்படி 90 சதவிகித மக்களுக்கு எடுத்து செல்லலாம் என தெரிந்து கொள்ள . உருவகப்படுத்த கணித வல்லுனர்கள் நமக்கு தேவை , இக்கருவிகள் எப்படி இணைந்து செயல்படுத்தலாம் என்று கணினி மூலமாக உருவகப்படுத்திப் புரிந்துகொள்ள . நிச்சயமாக , மருந்து நிறுவனங்களின் திறன்வாய்ந்த கருத்துக்கள் நமக்கு தேவை . இதற்கு நிதி அளிப்பதில் மிகவும் தாராள மனமுடைய பணக்கார தேசங்கள் நமக்கு தேவை . ஆக , இந்த மூலகங்கள் இணைந்து வந்தால் , நான் மிகவும் நன்நம்பிக்கையுடன் கூறுகிறேன் நாம் மலேரியாவை முற்றிலுமாக அழிக்க முடியும் என்று . இப்போது , நான் இரண்டாவது வினாவிற்கு செல்கிறேன் . முற்றிலும் மாறுப்பட்ட வினா ஆனபோதிலும் முக்கியமானதே . அது என்னவென்றால் : தலைசிறந்த ஆசிரியரை உருவாக்குதல் எப்படி ? மக்கள் நிறைய நேரம் செலவழிக்கும் வகையான கேள்வி இது , இதை நாம் நன்றாக புரிந்துகொள்வோம் . ஆனால், உண்மையில் , அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை . இது ஏன் முக்கியம் என்பதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன் . இங்குள்ள அனைவருக்கும் தலைசிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள் . நம் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைத்துள்ளது . இன்று நாம் இங்கு இருப்பதற்கு ஒரு காரணமும் அதுவே , நாம் வெற்றியாளர்களாக இருப்பதற்கு ஒரு காரணமும் அதுவே . இதை நான் சொல்வேன் , கல்லூரி படிப்பை முழுதாக முடிக்காதவனாக இருப்பினும் . எனக்கு தலைச்சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள் . அமேரிக்காவில் , பாடம் நடத்தும் முறைமை நன்றாகவே வேலை செய்தது . நன்றாகவே வேலை செய்ய கூடிய ஆசிரியர்கள் மிக சில இடங்களிலே இருந்தார்கள் . ஆக , மேல் 20 சதவீத மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்தது . அந்த 20 சதவீத மாணவர்கள் உலகின் சிறந்தவர்களானார்கள் , மற்றொரு மேல் 20 சதவீத மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் . அவர்களே மென்பொருள் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி செய்தனர் , அமெரிக்காவை முன்னிலையில் தங்க வைத்தனர் . தற்பொழுது , அந்த மேல் 20 சதவீதத்தினரின் பலம் குறையத் தொடங்கியுள்ளது , ஆனால் இதில் கவனிக்க படவேண்டியது , மற்ற சதவிகித மக்களுக்கு கிடைக்கும் கல்வித்தரம் தான் . அது பலவீனமாக மட்டும் இல்லை ; மேலும் பலவீனமாகி கொண்டிருக்கிறது . மேலும் தற்பொழுதைய பொருளாதார சூழல் , நல்ல கல்வி கற்ற மக்களுக்கே வாய்ப்புக்களை அளிக்கிறது . இதை நாம் மாற்றியாக வேண்டும் . மக்களுக்கு சரிசமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இதை நாம் மாற்ற வேண்டும் . நம் தேசம் வலுப்பெற வேண்டும் மற்றும் கணிதம் , அறிவியல் போன்ற மேம்பட்ட கல்விகளினால் செலுத்தப்படும் விஷயங்களில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் , இதை நாம் மாற்றியாக வேண்டும் . முதன்முதலில் நான் புள்ளிவிவரங்களை படித்த பொழுது நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அதிர்ந்து போனேன் .